1. விவசாய தகவல்கள்

ரூ.182 கோடி கரும்பு நிலுவை தொகைக்கு ஒதுக்கீடு: வேளாண் அமைச்சர்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Agriculture Minister

தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு நெல் , கரும்பு கொள்முதல் விலைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் தனியார் மற்றும் கூட்டுறவு ,பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் வைத்திருக்கும் நிலுவை தொகைகளை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விவசாயிகள் சங்கமும் , தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கமும் கோரிக்கை விளாடுத்தனர். மேலும் வேளாண்மை துறை அமைச்சரையும் சந்தித்து விவசாயிகள் சங்கத்தினுடைய தலைவர்கள் கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில் கூட்டுறவுத் துறை மற்றும் பொதுத்துறை, சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையாக மாநில அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை நிதி நிலை அறிக்கையின் (Agriculture Budget) மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தனியார் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக ஆலை நிர்வாகம் , துறை அதிகாரிகள் , சங்க பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்றும் அக்கூட்டத்திற்கு பிறகு அதற்கான உரிய தீர்வு காணப்படும் என்றும் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் (Tamilnadu Farmers) நலன்களை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் செயல்பட்டு வரும் பத்து கூட்டுறவு மற்றும் இரண்டு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் அன்றைய  நிலவரப்படி மீதமுள்ள தொகையை விவசாயிகளின் நலன் கருதி அவர்களுக்கு வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி ரூ.182 கோடியே 11 லட்சம் வழிவகை கடனாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை அமாரவதி, அறிஞர் அண்ணா , மதுராந்தகம், திருத்தணி , செங்கல்வராயன் , எம்.ஆர்.கே உட்பட அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு பிரித்து வழங்கப்படும்  என்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை விவாதத்தின் போது வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் (MRK Panneerselvam) செல்வம் அறிவித்துள்ளார்!!

மேலும் படிக்க:

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்- சட்டசபையில் இன்று தாக்கல்!

TN Budget 2021: வேளான் பட்ஜெட் மீது உள்ள எதிர்பார்ப்புகள்!

English Summary: Rs 182 crore allotted for sugarcane arrears: Agriculture Minister! Published on: 21 August 2021, 02:42 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.