News

Thursday, 03 September 2020 02:16 PM , by: Daisy Rose Mary

credit : one india

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்குக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழைக்கு வாய்ப்பு (TN to get heavy Rain)

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும்

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning for fisherman)

  • இன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதிகள், தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • நாளை தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல், தெற்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதி, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க....

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 675 அப்ரெண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நவம்பர் மாதத்திற்குள் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.2000 தவனை வழங்க ஏற்பாடு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)