1. செய்திகள்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 675 அப்ரெண்டிஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 675 அப்ரெண்டிஸ் பணிக்கு வேலை

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்டில் 675 அப்ரெண்டிஸ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதார்கள் online மற்றும் offline முறைகளை பயன்படுத்தி விண்ணப்பிக்கவேண்டும்.

பிட்டர் (fitter) மெக்கானிக்ஸ் (Mechanic), கார்பென்டர், வெல்டர், பிளம்பர் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் மாதாந்திர உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 விண்ணப்பிக்கும் முறை

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் வரும் 11.09.2020 காலை 10.00 மணி முதல் 20.09.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் www.nlcindia.com என்ற இணையதளத்தில் ONLINE REGISTRATION FORM-ல் பூர்த்தி செய்து விண்ணப்ப்படிவத்தினை PRINT எடுத்துக்கொள்ளவேண்டும்.

கையொப்பமிட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் (ITI / HSc Mark list), மாற்றுசான்று (Transfer certificate), சாதிசான்று (Community certificate), கல்வி சான்று (ITI / Degree certificate), முன்னாள் ராணுவ வீரர் வாரிசு அல்லது மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவற்றின் நகல்களை இணைந்து 25.09.2020 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள Collection box என்கிற பெட்டியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய முகரவி

முகவரி
துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்
என்.எல்.சி. இந்தியா நிறுவனம்
வட்டம் -20, நெய்வேலி-607808

கல்வி தகுதி, பணியிடங்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்கள்

தகுதிகள்

  • வயது வரம்பு: 01.10.2020 அன்று 14 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும்

  • இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்சமயம் பயிற்சியிருப்போர் மீண்டும் பயிற்சி பெற தகுதியில்லை

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்


கூடுதல் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள் 

அசல் சான்று சரிபார்பதற்கு அழைக்கப்படுபவர்கள் பட்டியல்  www.nlcindia.com என்ற இணையதளத்தில் உத்தேசமாக 01.10.2020 அன்று வெளியிடப்படும்

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் தகுதி உள்ளவர்கள் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மேற்கண்ட முகவரியில் வரும் அக்டோபர் மாதாம் நடைபெறும். 

 

English Summary: Applications are welcome for Apprentice jobs at NLC

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.