
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு (Heavy Rain) வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ( Earturthy Winves )காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் கன மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் பெய்ய தொடங்கிய கனமழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
சுமார் 10 மணிநேரத்திற்கு மேலாகக் கொட்டித் தீர்த்த மழை காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாக மாறியது.
மழை காரணமாக, ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ( Earturthy Winves ) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னதுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை முன்னறிவிப்பு(Weather Forecast)
6.01.2021
நீலகிரி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்ய கூடும்.
07.01.2011
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை(Chennai)
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடியின்னதுடன் கூடிய மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் கன மழையும் பெய்யக்கூடும்.
அதிகபட்ச மழைபதிவு (Maximum Rain)
சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகியவற்றில் தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சு-தோல்வியில் முடிவடைந்தது!
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!