வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
19.05.21 மற்றும் 20.05.21
கனமழை (Heavy rain)
வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மிதமான மழை (Moderate rain)
-
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
இதேபோல், வட கடலோர மாவட்டங்கள் மற்றுத் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும்.
21.05.21
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் இலேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலத்தில் 4சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
கடல் உயர் அலை முன்னறிவிப்பு (Sea high tide forecast)
19.05.21
தென் தமிழகக் கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை)இன்று இரவு 11.30 மணி வரை கடல் அலை 2 முதல் 3.4 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும்.
22.05.21 மற்றும் 23.05.21
தமிழகக் கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென்மேற்கு பருவமழை (South West Monsoon)
தென்மேற்குப் பருவ மழை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்
இவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் கிடையாது, தமிழக அரசின் அதிர்ச்சித் தகவல்!