மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாகச் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள சூழ்ந்துள்ளது. இதனால் மும்பையின் நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது, இதனால் மகாராஷ்டிராவின் மும்பை, தானே, பால்கர், உள்ளிட்ட மாவட்டங்கள் அவ்வப்போது மழை பெய்து வந்தது.
மும்பையில் தொடரும் கன மழை (Heavy rains continue in Mumbai)
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யத்துவங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
மகாராஷ்டிராவின் தனே மற்றும் கொங்கன் பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்துள்ளது. அத்துடன் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கன மழை பெய்தது. தெற்கு மும்பை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 129.6 மில்லி மீட்டர் மழையும், மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 200.8 மிமீ மழை பெய்திருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மும்பையின் செம்பூர், வடலா, தாராவி, அந்தேரி, ஹிந்த்மாதா, , ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் (Rain continues for the next 2days )
கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மும்பையின் பல இடங்களில் போக்குவரத்து தடைப் பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்தமழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை (TN May get Rainfall in 10 Districts)
தமிழகத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பாதக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக வட தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழையும். கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning for Fisherman)
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க..,
விவசாயிகளுக்கு உதவும் மத்திய-மாநில அரசுகளின் நல திட்டங்கள்!
முறையான பயிர்வாரி சாகுபடி முறைகள் & தொழிநுட்பங்கள் - பகுதி-1!