வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் கோவை உட்பட 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன மழைக்கு வாய்ப்பு
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.
கோவை, நீலகிரி, சேலம், தரும்புரி, கிருஷ்ணகிரி, தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்
மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
அந்தமான், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இன்று மற்றும் நாளை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
கடலோர கேரளா, கர்நாடகா, லட்ச தீவு, மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
-
இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய வானிலை மையம் அறிவிப்பு
இதனிடையே, கடந்த ஜூலையில் மழையில் அளவு இயல்பை விட 10 சதவீத பற்றாக்குறையுடன் முடிவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதில் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இயல்பான மழை பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிட்டது மத்திய அரசு!!
எஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்