Krishi Jagran Tamil
Menu Close Menu

தங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிட்டது மத்திய அரசு!!

Wednesday, 08 July 2020 07:42 AM , by: Elavarse Sivakumar

Credit : CompareRemit

நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், நான்காம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, துவங்கியுள்ளது. இதில் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு, 4,852 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், பாதுகாப்பான முதலீட்டுக்கு ஒரு வாய்ப்பாக, அரசின் இந்த தங்க பத்திர வெளியீடப்பட்டுள்ளது. 

இது குறித்த மேலும் சில முக்கியமான விபரங்கள்

 • அரசின், நான்காம் கட்ட தங்க பத்திர வெளியீடு, வரும், 10ம் தேதியுடன் முடிவடைகிறது.

 • இந்த நான்காம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு, 4,852 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 • பத்திர வெளியீட்டு அறிவிப்புக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு, வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

 • வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, ஒரு கிராமுக்கு, 50 ரூபாய் வீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், 'கிரெடிட், டெபிட்' கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க பத்திரங்களை வாங்குவோருக்கு, ஒரு கிராம், 4,802 ரூபாய்க்கு கிடைக்கும்.

 • இந்த தங்க பத்திரங்கள், வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படும்.

 • மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், ஒரு 'யூனிட்' என்ற கணக்கில் வழங்கப்படும்.

 • நடப்பு நிதியாண்டில், இந்த தங்க பத்திரங்கள், ஆறு கட்டங்களாக, ஏப்ரல் முதல், செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட உள்ளது.

 • பொதுவாக, உள்நாட்டில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும்போது, அரசு இந்த தங்க பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும். கடந்த, 1ம் தேதி, முன்பேர சந்தையில், 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 48 ஆயிரத்து, 982 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

 • தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு, ஆண்டு வட்டி விகிதம், 2.50 சதவீதமாக வழங்கப்படுகிறது. இந்த வட்டி வருமானம், முதலீட்டாளரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப வரி விதிக்கப்படும்.

 • தங்க பத்திரங்களின் முதிர்வு காலம், எட்டு ஆண்டுகள் ஆகும். இருப்பினும், முதலீட்டாளர்கள் ஐந்தாம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற விரும்பினால் வெளியேறலாம்.

 • இந்த தங்க பத்திர முதலீட்டில், முதிர்ச்சியின்போது , மூலதன ஆதாய வரி விதிக்கப்படாது என்பது, வேறு எதிலும் இல்லாத தனிப்பட்ட சிறப்பாகும்.

மேலும் படிக்க...

PM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்!

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

Gold bond தங்க சேமிப்பு பத்திரம் சேமிப்பு
English Summary: Gold bond issued by Union Government for Current Bond

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

 1. ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, வருஷத்திற்கு 4 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க! பார்த்தசாரதி சொல்றத கேளுங்க..!
 2. விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
 3. 40% மானியத்தில் காய்கறி விதைகள் தொகுப்பு திட்டம்!- பயனடையுமாறு ஆட்சியர் அழைப்பு!
 4. விவசாயத்தில் இரட்டை லாபம் ஈட்ட வேண்டுமா? வேளாண்மை மீன் வளர்ப்பில் ஈடுபடுங்கள்!
 5. இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!
 6. நீலகிரிக்கு தொடரும் ரெட் ஆலர்ட்; அதி கன மழைக்கும் வாய்ப்பு!!
 7. வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!
 8. மானாவாரி துவரையில் அதிக மகசூல் பெற வேண்டுமா? வேளாண்துறை அளிக்கும் ஆலோசனைகள்!!
 9. சத்தான சமச்சீர் உணவிற்கு அவசியமான கீரைகளும் அதன் நன்மைகளும்!
 10. குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் காடை வளப்பு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.