செஞ்சி பகுதியில் திடீரென மழை பெய்ததால் மார்க்கெட் கமிட்டியில் திறந்த வெளியில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மாதம் முதல் துவங்கி நெல் அறுவடை (Paddy Harvest) நடந்து வருகிறது.
70 சதவீதம் நெல் அறுவடை முடிந்த நிலையில் எஞ்சிய பகுதிகளில் அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் எந்திரங்களை கொண்டு நெல் அறுவடை செய்ய முடியாமல் சேறும் சகதியுமானது.
மழையில் நனைந்த நெல் மூட்டைகள் (Bundles of paddy soaked in the rain)
பல இடங்களில் நெல் அறுவடையை தொடர முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த 3,000 நெல் மூட்டைகள் திறந்த வெளியில் இருந்தன. அந்த மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்தன. இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.
கவலையில் விவசாயிகள் (Farmers Suffers)
அறுவடை நேரத்தில் மழை பெய்துள்ளதால், அறுவடையைத் தொடர் முடியாமலும், ஏற்கனவே அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனௌந்திருப்பதாலும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நெல் கொள்முதல் மையங்களில், நெல் மூட்டைகளைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
விவசாயிகள் கவனத்திற்கு: விதைச்சான்று பெற என்ன செய்ய வேண்டும்!
ஒருங்கிணைந்த பண்ணையம்: முதல் முயற்சியே வெற்றி கண்ட இயற்கை விவசாய தம்பதி!