அரபிக்கடலில் நிலைகொண்டுள்ளக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
புயலாக மாறுகிறது (Becomes a storm)
அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகிறது.
ஆரஞ்சு அலர்ட் (Orange Alert)
இதனால் மே 17ம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதி கனமழை (Heavy rain)
நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யும்.
மிக கனமழை (Very heavy rain)
இதேபோல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை (Heavy rain)
திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் குளித்துறையில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
குமரி கடல், லட்சத்தீவு மற்றும் அரபிக்கடலை ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
PM Kisan: 8-வது தவணை நிதியை விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி - 9.5 கோடி விவசாயிகள் பயன்!!
தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!
கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!