1. செய்திகள்

PM Kisan: 8-வது தவணை நிதியை விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி - 9.5 கோடி விவசாயிகள் பயன்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்த பி.எம் கிசான் திட்டத்தின் 8 வது தவணை இன்று விடுவிக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டுள்ளார்.

பி.எம் கிசான் திட்டம்

பி. எம் கிசான் நிதி திட்டம் என்பது மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்குத் தகுதியான விவசாய குடும்பங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் கண்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் வரவு வைக்கப்படுகிறது. 

3 தவணைகளில் பணம் வரவு

முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையும் மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. இதுவரை 7 தவணைகள் விடுவிக்கப்பட நிலையில் 8-வது தவணை எப்போது விடுவிக்கப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

8வது தவணை விடுவிப்பு

இந்நிலையில் விவசாயிகளுக்கான 8 ஆவது தவணைக்கான நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்துள்ளார். இதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதில் முதல் முறையாக, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்தத் திட்டத்தால் பயனடைவார்கள்.

பி.எம் கிசான் நிலை அறிய என்ன செய்ய வேண்டும்?

  • உங்களின் கணக்கு நிலை குறித்து அறிய முதலில் www.pmkisan.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

  • முகப்புப்பக்கத்தில் "Farmers Corner" என்பதைக் கிளிக் செய்க.

  • உங்களின் கணக்கு நிலை குறித்து அறிய ''Beneficiary status" என்பதைக் கிளிக் செய்யுங்கள், அல்லது பயனாளிகளின் பட்டியல் குறித்து அறிய ''Beneficiary list" என்பதை கிளிக் செய்யுங்கள்.

  • பின் உங்களின் மாநிலம், மாவட்ட, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட அங்கே கேட்கப்படும் தகவல்களை நிறப்புங்கள்.

  • பிறகு "Get Report" என்பதை கிளிக் செய்க

  • இப்போது உங்களின் கணக்கு நிலவரங்களை பார்க்கமுடியும்.

பயனாளிகளின் பட்டியலை நேரடியாக பார்க்க 

Click here 

English Summary: PM Modi Released 8th Installment of PM-Kisan Yojana today, Check your details here.

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.