பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 29 September, 2021 2:28 PM IST
High risk of corona in smokers

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், தற்போது இந்தியாவில் அதன் பாதிப்பு குறைந்துள்ளது. புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகை பிடிப்பவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்படும் போது, மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை 80 சதவீதம் அதிகரிப்பதாகவும், இவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வுகள் 

சீனாவில் கோவிட் வைரஸ் பெருந்தொற்று கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்டது. தற்போது வரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே உலுக்கி வருகிறது. இந்த பெருந்தொற்றை ஏற்படுத்திய கோவிட் வைரஸ் குறித்து உலகெங்கும் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் (கிளிப்ட்) ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவித்து உள்ளதாவது:

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் ஆய்வு நடத்தப்பட்டது. 4 லட்சத்து, 21 ஆயிரத்து, 469 பேரை ஆராய்ந்ததில் புகை பிடிப்பதற்கும், கோவிட் பாதிப்பு தீவிரம் அடைவதற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகை பிடிப்பவர்களுக்கு கோவிட் பாதிப்பு ஏற்படும் போது, மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை 80 சதவீதம் அதிகரிக்கிறது. இவர்கள் உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளது.

புகை பிடித்தல்

புகை பிடித்தால் இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது போல, கோவிட் வைரஸ் பாதிப்பும் தீவிரமாக தாக்க வாய்ப்பு உள்ளது; உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால் புகை பிடிப்பதை கைவிட இது ஏற்ற தருணமாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

புகைப் பழக்கத்தை கைவிட சில உளவியல் ஆலோசனைகள்

கொரோனா வைரஸ் பரவல் நீண்ட காலம் தொடரும்: உலக சுகாதார அமைப்பு தகவல்!

English Summary: High risk of corona in smokers: study information!
Published on: 29 September 2021, 02:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now