News

Friday, 08 July 2022 09:48 AM , by: Poonguzhali R

Holidays again for Schools! Collector's Announcement!!

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒருவாரமாகக் கனமழை பெய்து வருகின்றது. அதனால், மழை அடிவாரத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகக் கவியருவில் தொடர்ந்து 7 நாட்களாக நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகின்றது என்பது மேலும் நோக்க வேண்டிய செய்தியாகும். இந்நிலையில் வால்பாறை, ஆழியார் அணை பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சுற்றுலா வரும் பயணிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 

இதன் காரணமாகச் சுற்றுலாவிற்கு என வருகை தந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதோடு, ஆழியார் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. தொடர் மழை பெய்தால் அணை விரைவில் நிரம்பக் கூடும் என எதிர்ப்பார்க்கின்றனர், பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!

இந்த நிலையில் வால்பாறையினைச் சுற்றியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை காரணமாக இன்று (ஜூலை 8) பள்ளிகளுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மழையானது தொடர்ந்து பெய்து வருவதால் இந்த விடுமுறை செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க: பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள்! மத்திய அரசின் புதிய திட்டம்!!

தொடர் மழை காரணமாக நேற்றைய தினமும் (07/07/2022) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!

தமிழக அரசு: நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கத் தேவையில்லை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)