கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டது.
இருப்பினும் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ளது.
31ம் தேதி வரை (Until the 31st)
இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் வெளியான அறிவிப்பில், கொரோனா அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி 10, 11, 12ம் வகுப்புகளுக்கும் ஜன.,31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி19ம் தேதி தொடங்க இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு தமிழக அரசு வெளிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ரத்து (Cancel exams)
ன்னதாகக் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக,கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதன் காரணமாக, கடந்த ஆண்டு 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில்1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...