1. செய்திகள்

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Pipin Rawat helicopter crash reported as bad weather
Credit : Maalaimalar

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாதற்கு, மோசமான வானிலையே காரணம் என முப்படை விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து (Helicopter crash)

கோவை மாவட்டம் சூலூரில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த டிசம்பர் 8-ந் தேதி குன்னூரில் விபத்துக்குள்ளானது. இதில் 14 பேரும் உடல்சிதறி உயிரிழந்தனர்.

சந்தேகம் (Suspicion)

நாட்டை துக்கத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணமா அல்லது சதிச் செயலா? என்ற சந்தேகம் எழுந்தது.

விசாரணை (Investigation)

இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விமானப்படை தளபதி மானவேந்திரா சிங் தலைமையிலான முப்படை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அறிக்கைத்தாக்கல் (Reporting)

இந்தக் குழு தனது விசாரணையை நிறைவு செய்து சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. முப்படை குழு விசாரணை அறிக்கையின் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டிசம்பர் 8-ம்தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய முப்படைக் குழு, அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில், ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, நாசவேலையோ அல்லது கவனக்குறைவோ காரணம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை (Bad weather)

ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் விபத்துக்குள்ளானது என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விமானப்படை தனது அறிக்கையில் கூறி உள்ளது.

மேலும் படிக்க...

கொரோனா வைரஸைத் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம்!

3ம் அலையை தடுக்க 3 முக்கிய காரணிகள்: மத்திய ஆலோசனை குழு!

English Summary: Pipin Rawat helicopter crash reported as bad weather Published on: 15 January 2022, 08:51 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.