News

Monday, 21 February 2022 09:44 PM , by: Elavarse Sivakumar

உள்ளாட்சித் தேர்தலுக்கான மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வரும் 22 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தத் தேர்தலில், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் நிலவியதாகவும், ஒருசில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் அடிப்படையில் , நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புகார்கள் எழுந்த 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் திங்கட்கிழமை மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எந்தெந்தப் பள்ளிகள்?

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, வண்ணாரப்பேட்டையில் உள்ள வார்டு எண் 51ல், வாக்குச்சாவடி எண் 1174 மற்றும் பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் உள்ள வார்டு எண் 179ல், வாக்குச்சாவடி எண் 5059 ஆகிய இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி வார்டு எண் 17ல் வாக்குச்சாவடி 17 டபிள்யு மற்றும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண் 16ல் வாக்குச்சாவடி 16 எம், வாக்குச்சாவடி 16 டபிள்யு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25ல், வாக்குச்சாவடி 57 எம், வாக்குச்சாவடி 57 டபிள்யு ஆகிய இடங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.எனவே மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கட்கிழமை அதாவது பிப்ரவரி 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களைத் தவிரப் பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க...

இதைச் செய்யாவிட்டால் உங்கள் PAN Card முடக்கப்படும்!

பணம் தங்குதடையின்றி வரவேண்டுமா? இந்தச் செய்தால் போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)