News

Monday, 24 January 2022 11:03 PM , by: Elavarse Sivakumar

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 31ம் தேதி வரை பள்ளிகளுககு அளிக்கப்பட்டுள்ள விடுமுறையை மேலும் 1 வாரம் நீட்டிக்கலாமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. இந்த விடுமுறை நீட்டிப்பு, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிகிறது.

9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து, நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.


நேரடி வகுப்புக்குத் தடை (Prohibition on live class)

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமிக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

விடுமுறை (Holidays)

எனினும், ஆன்லைன் வாயிலாக மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதே போல், பொதுத் தேர்வு எழுத உள்ள 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி சுமார் 30 ஆயிரம் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பரிசீலனை (Review)

இதன் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மேலும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்கலாமா? என்பது குறித்துப் பள்ளிக் கல்வித் துறை பரிசீலித்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 9ம் வகுப்பு முதல் 12ம் வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க...

10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!

கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)