News

Friday, 02 September 2022 04:49 PM , by: Deiva Bindhiya

How many transactions can be done in a day on Phone Pay or Google Pay?

இந்த டிஜிட்டல் யுகத்தில், நம்மில் பெரும்பாலோர் மொபைல் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸை நம்பியிருக்கிறோம். இப்போதெல்லாம், அக்கம்பக்கத்தில் உள்ள கடையில் ஒரு கப் டீ குடித்தாலும் UPI அல்லது வேறு ஏதேனும் ஆன்லைன் பேமெண்ட் மூலம் பில் செலுத்துகிறோம்.

இந்த சில்லறைக் கட்டணங்கள் மட்டுமல்லாமல், எந்தவொரு முக்கியமான பரிவர்த்தனைக்கும், நாம் இப்போது ஜிப், Phonepay, மற்றும் Google pay போன்ற ஆன்லைன் டிஜிட்டல் பேமெண்ட்டுகளைச் சார்ந்துள்ளோம்.

இந்த ஆன்லைன் கட்டண முறைகளில் மிகவும் பிரபலமான ஒன்று UPI ஆகும். நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இந்த உடனடி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தினமும் 20 கோடிக்கு மேல் பரிவர்த்தனை, இதில் நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

இதன் மூலம், ஆயிரம் அல்ல லடசம் அல்ல கோடிக்கணக்கில் ரூபாய்கள், UPI IMPS அமைப்பின் மூலம், ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு சில நொடிகளில் பணத்தை மாற்ற முடியும். இந்தப் பணப் பரிவர்த்தனைக்கு இதுவரை கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை. நீங்கள் யாருக்கும் இலவசமாக பணம் அனுப்பலாம். அதனால்தான் இந்த ஊடகம் மிகவும் பிரபலமானது. ஆனால், அதேநேரம் UPI கட்டணங்களுக்கும் சில வரம்புகள் உள்ளன.

24 மணிநேரமும் UPI மூலம் பணம் செலுத்தலாம். ஆனால் இந்த கட்டணத்திற்கு அதிக வரம்பு உள்ளது. NPCI இல் உள்ள தகவல்களின்படி, UPI மூலம் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பணம் பரிவர்த்தனை செய்யலாம். இருப்பினும், வெவ்வேறு வங்கிகளுக்கு இந்த உச்ச வரம்பு வேறுபட்டிருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், இந்த உச்ச வரம்பை நிர்ணயிக்க வங்கிக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால், வெவ்வேறு வங்கிகளில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வரம்பு இருக்கும். UPI பேமெண்ட்கள் என வரும்போது சில முக்கியமான காரணிகள் உள்ளன. இவை ஒரு நாளின் அதிகபட்ச பரிவர்த்தனை மதிப்பு, ஒரே கட்டணத்தில் அதிகபட்ச பரிவர்த்தனை அளவு மற்றும் ஒரு நாளில் அதிகபட்ச பரிவர்த்தனைகள்.

HDFC வங்கியின் இணையதளத்தில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, UPI மூலம் 10 பரிவர்த்தனைகள் செய்ய வங்கி அதன் வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது. ஒரு நாள் பரிவர்த்தனை 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. புதிய UPI பயனர்களுக்கு முதல் 24 மணிநேரத்தில் 50 ஆயிரம் பரிவர்த்தனை வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 10 பரிவர்த்தனைகளை செய்யலாம்.

மேலும் படிக்க:

திண்டுக்கல்: அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடன் பெறலாம், எவ்வளவு?

18% GST on paratha: சப்பாத்திக்கும் பராத்தாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவோ?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)