1. விவசாய தகவல்கள்

திண்டுக்கல்: அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடன் பெறலாம், எவ்வளவு?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Dindigul: All farmers can get crop loan, how much?

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான பருவமழை துவங்கியுள்ளதால் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 198 தொடக்க வேணாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என மண்டல இணைப்பதிவாளர் கோ.காந்திநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 47,551 உறுப்பினர்களுக்கு ரூ. 552.31 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 12,858 புதிய உறுப்பினர்களுக்கு ரூ. 133.27 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வழி காட்டுதலின்படி நடப்பு ஆண்டு 12,364 உறுப்பினர்களுக்கு, இதுவரை ரூ.138 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1640 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.17.26 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

இது கடந்த ஆண்டை விட ரூ.43 கோடி கூடுதலாகும். விவசாயிகளுக்கு கடன்கள் வழங்குவதற்கு தமிழ்நாடு மாவட்ட தொழில்நுட்ப குழுவினரால் 2022-23ம் ஆண்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடியாகும் பல்வேறு பயிர்களுக்கு, கால்நடை வளர்ப்புக்கு, மீன் வளர்ப்புக்கு தேவையான கடன் அளவு, கடன் வழங்கும் காலம், தவணை காலம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு ஏக்கருக்கு

நெல் - ரூ. 31,250
மரவள்ளிக்கிழங்கு- ரூ.32,550
சோளம்- ரூ.9,150

கம்பு- ரூ.9,250
மக்காச்சோளம்- ரூ. 27,000,
நிலக்கடலை- ரூ.23,200,
நிலக்கடலை மானாவாரி- ரூ.14,350,
பருத்தி- ரூ.25,450,
முசுக்கொட்டை- ரூ.50,850
வெங்காயம்- ரூ.36,850
மிளகாய்- ரூ.25,300
தென்னை- ரூ.28,350
மாந்தோப்பு-ரூ.17,900
திராட்சை- ரூ.36,500
கொய்யா- ரூ.49,500
சப்போட்டா- ரூ.19,500
எலுமிச்சை- ரூ.19,750
பிளம்ஸ்- ரூ.26,050
பப்பாளி- ரூ.24,150
வாழை-ரூ.60,900

கத்திரிக்காய்- ரூ.17,750
சவ் சவ் - ரூ.28,900
காலி பிளவர் - ரூ.23,350
கேரட்- ரூ.22,500
முள்ளங்கி - 18,250
முட்டைக்கோஸ்- ரூ.20,700
தக்காளி- ரூ.26,250
முருங்கை- ரூ.26,550
பீட்ரூட்- ரூ.16,600
உருளைக்கிழங்கு -ரூ.39,500
பாகற்காய் - ரூ.19,520
பீன்ஸ் - ரூ.12,200
பந்தல் அவரை- ரூ.18,650
மல்லிகை- ரூ.35,500

ரோஜா - ரூ.27,150
சம்மங்கி- ரூ.61,950
மரிக்கொழுந்து - ரூ.20,700
காபி பராமரிப்பு- ரூ.48,700
மிளகு பராமரிப்பு- ரூ.19,850
பூண்டு- ரூ.54,200
அவகோடா- ரூ.16,700
பயிர்கடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அனைத்து விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்று பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

சென்னை - மைசூரை இணைக்கும் வந்தே பாரத் ரயில் அறிமுகம்!

அஸ்வகந்தா தோலுக்கு மற்றும் சருமத்திற்கு எவ்விதத்தில் நன்மைகள்?

English Summary: Dindigul: All farmers can get crop loan, how much? Published on: 15 October 2022, 11:00 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.