+2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், தமிழகத்தில் அரசு, அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் இணைய ஆன்லைன் வாயிலாக இன்று முதல் விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்து அனுப்பலாம் எனத் தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
+2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 20-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டது. அந்த முடிவில் 93.76 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தனர்.
மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய விதிமுறைகள் இதோ!
இந்த நிலையில் தமிழகம் முழுவது உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர இன்று முத்ல ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப்பிக்கலாம் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பிக்க முனைப்புக் காட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: ரேஷன் கடையில் இனி அரிசிக்கு பதிலாகக் கேழ்வரகு: தமிழக அரசு
பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளடக்கிய இளநிலை படிப்புகளில் சேர வரும் 22-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை இணையம் வாயிலாக விண்னப்பிக்கலாம் என உயர்க்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை! புதிய விலை நிலவரம்!
எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்?
அரசு வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ இணைய தளமான www.tngasa.in அல்லது www.tngasa.org என்ற முகவரிகளில் மாணவர்கள் தங்கள் விவரங்களைப் பூர்த்திச் செய்து விண்னப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 50 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இணைய வழியில் வங்கிச் சேவை, வங்கி அட்டைகள் மூலம் செலுத்தி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: கோழி வளர்ப்புக்குக் கடன் வழங்கும் வங்கிகள்! இன்றே பதிவு செய்யுங்கள்!!
இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளிகள் மூலமாக விண்னப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, மாநிலம் முழுவதும் இதற்கென்றே 110 சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: FD-யின் வட்டியை அதிகரித்த வங்கிகள் எவை? புதிய வட்டிவிகிதங்களின் பட்டியல் உள்ளே!
மேலும் கூடுதல் விவரங்கள் தேவை எனில் 044-28260098, 044-28271911 ஆகிய எண்களுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!
பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!