அரசு வழங்கும் ரேஷன் உணவு தானியங்களை ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் கூட வாங்க தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. அது எப்படி என்பதுபற்றிப் பார்க்கலாம்.
கரீப் கல்யாண் யோஜனா! (garib kalyan rojgar yojana )
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும், ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பினருக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏழை எளியமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில,கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஏழை மக்களுக்கு இந்த திட்டத்தின் பயனை உறுதி செய்ய ஏதுவாக இந்தத் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை இல்லாதவர்கள்
ஆனால் ஸமார்ட் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் இத்திட்டத்தின் பலனை அடைய புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு போதும் (Adhaar Card)
உங்களிடம் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லையென்றால், உங்களது ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு பதிவுச் சீட்டு வழங்கப்படும்.
இந்தச் சீட்டை ரேஷன் கடையில் காட்டிய பிறகு உங்களுக்கு எவ்விதத் தடையும் இல்லாமல் உணவு தானியங்கள் கிடைக்கும். இதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுகு மத்திய அரசு பொறுப்பு நிர்ணயித்துள்ளது.
திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் விரிவாக்கத்திற்காக ரூ.90,000 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் 74.3 கோடி மக்கள் பயனடைந்தனர். மே மாதத்தில் 74.75 கோடிப் பேரும், ஜூன் மாதத்தில் 64.72 கோடிப் பேரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
தமிழர் வேளாண்மையின் பொக்கிஷமே ஊடுபயிர் - தற்போது கையில் எடுத்துள்ள மேலை நாடுகள்!
தைராய்டு பிரச்னை வராமல் தடுக்கும் செம்பு பாத்திரம்! 10 மருத்துவப் பயன்களின் பட்டியல் இதோ!