தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் அதி தீவிரப் புயலாக மாறி திங்கட்கிழமை இரவு குஜராத்தில் கரையைக் கடந்தது.
முன்னெச்சரிக்கை (Precaution)
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி பகுதியையொட்டிய பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.
கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது. இந்த புயல் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.
தயார் நிலை (Ready position)
இதையடுத்து புயலை எதிர்கொள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. மேலும் பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
கரையைக் கடந்தது (Crossed the shore)
இதற்கிடையே, நேற்று அதிகாலை அதி தீவிரபுயலாகத் தீவிரமடைந்த புயல், வேகமாக நகரத் தொடங்கியது. நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர்- மாகுவா இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது. முன்னதாக மும்பை கடல் பகுதியில் 145 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்து சென்றது.
சூறைக் காற்று (Hurricane)
இதன் காரணமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே மழை பெய்ய தொடங்கியது. மும்பையில் 120 கி.மீ. வேகம் வரை சூறைக்காற்று வீசியது. இடைவிடாத மழையும் கொட்டி தீர்த்தது. இதனால் நாட்டின் நிதி தலைநகர் என அழைக்கப்படும் மும்பை நிலைகுலைந்து போனது. இதேபோல மும்பை அருகே உள்ள இதர கடலோர மாவட்டங்களிலும் சுழன்று அடித்த காற்றுடன், கனமழையும் கொட்டி தீர்த்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.
புரட்டிப்போட்டது (Flipped)
தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும்போது மணிக்கு 155 முதல் 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டு இருந்தது. சூறைக்காற்று சுழன்று அடித்ததால் குஜராத்தை டவ்-தே புயல் சின்னாபின்னமாக்கியது.
கொட்டித் தீர்த்த கனமழை (Heavy rain)
அங்கு கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று, பேய் மழை காரணமாக பல இடங்கள் சின்னாபின்னமானது. ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன.
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி பகுதியையொட்டிய பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை (Heavy rain)
கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று, பேய் மழை காரணமாக பல இடங்கள் சின்னாபின்னமாயின. ஏராளமான மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன.
கோவா மாநிலத்திலும் புயலுக்கு பலத்த மழை பெய்தது. யூனியன் பிரதேசமான டாமன் டையுவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.
தொலைபேசியில் விசாரிப்பு (Inquiry over the phone)
புயல் சூறையாடிக்கொண்டு இருந்த நேரத்தில் ஆறுதல் அளிக்கும் வகையில் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோரைப் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார்.
14 பேர் பலி (14 people were killed)
இதற்கிடையே ‘டவ்தே’ புயல் காரணமாக கர்நாடகத்தில் 121 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்தனர்.இதன் காரணமாக மராட்டியம் மற்றும் கர்நாடகத்தில் புயலுக்கு 14 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் படிக்க...
விவசாயிகள் போராட்டம்: மே 26ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்பு!
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!