1. செய்திகள்

Cyclone: இன்று மாலை அல்லது இரவு குஜராத்தில் கரையைக் கடக்கிறது டவ்-தே புயல் !

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tauk-tae Cyclone makes landfall in Gujarat this evening or tonight!

Credit : The Financial Express

அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் இன்று உச்ச உயர் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தின் போர்ப்பந்தருக்கும், மஹூவாவுக்கும் இடையேக் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

டவ்-தே புயல் (Cyclone Tauk-tae)

மத்தியக் கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிரப் புயலான டவ்-தே, இன்று காலை 5.30 மணியளவில் உச்ச உயர் தீவிரப் புயலாக வலுப்பெற்று மத்தியக் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இன்றுக் கரையைக் கடக்கும் (Landfall)

தற்போது டையூவில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு தென்கிழக்கு திசையிலும், மும்பைக் கடல் பகுதியில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இன்று இரவு குஜராத் மாநிலத்தின் போர்ப்பந்தருக்கும், மஹூவாவுக்கும் இடையேக் கரையைக் கடக்கும்.

17.05.21 மற்றும் 18.05.21

மிதமான மழை  (Moderate rain)

வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இலேசான மழை (Light rain)

தென் கடலோர மாவட்டங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.

வறண்ட வானிலை (Dry Weather)

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

19.05.21

  • நீலகிரி, சேலம், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.


சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் பந்தலூரில் 13 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

கடல் உயர் அலை முன்னறிவிப்பு (Sea high tide forecast)

18.05.21

  • தென் தமிழகக் கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) நாளை இரவு 11.30 மணி வரை கடல் அலை 2 முதல் 2.3 கிலோ மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும்.

  • எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தந்தைக்கு உதவ நெல் அறுவடை இயந்திரத்தை இயக்கிய பள்ளி மாணவி! கிராம மக்கள் பாராட்டு!

டவ்தே புயல் குஜராத்தில் கரையைக் கடக்கும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

கறவை மாடு, அசில் ரகக் கோழி வழங்கியதில் மெகா ஊழல் - மருந்து கொள்முதலிலும் பல கோடி சுருட்டல்!

English Summary: Tauk-tae Cyclone makes landfall in Gujarat this evening or tonight!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.