இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் (ICAR) காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வெளியீட்டிருப்பது குறிப்பிடதக்கது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் தலைமையகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பின் விரிவான விளக்கத்தை, இந்தப் பதிவில் காணலாம்.
44000 ரூபாய் சம்பளத்துடன் டெல்லியின் தலைமையகத்தில் ICAR வேலை வாய்ப்பைப் பெற வாய்ப்பு வந்துள்ளது. இதற்கு, சில விதிமுறைகள் உள்ளன. இந்த பணிக்கான அடிப்படைத் தகுதிகள், பணியிடம் எங்கே, எத்தனை காலியிடங்கள் இருக்கின்றன என இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களும், கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
அடிப்படை வயது தகுதி விவரம் (Age Eligibility Details):
வயது வரம்பு : 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வு உண்டு என்பது குறிப்பிடதக்கது.
கல்வித்தகுதி விவரம் (Educational Qualification Details):
பட்டப் படிப்பு (Graduates)
பணியிடங்கள் விவரம் (Post Details):
மொத்த பணியிடங்கள் | 462 |
உதவியாளர் (ICAR HQRS இல்) | 71 |
உதவியாளர் (ICAR HQRS இல்) | 391 |
சம்பள விவரம் Income Details:
உதவியாளர் (ICAR தலைமையகம்) | 44,900/- + படிகள் |
உதவியாளர் (in ICAR தலைமையகம்) | 35400/- + படிகள் |
தேர்வு முறை விவரம்(Selection method details):
எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
முக்கிய நாட்கள் குறித்த விவரம் (Details of important days):
ஆன்லைன் பதிவுக்கான தொடக்க தேதி - 07/05/2022 (காலை 10 மணி)
டெபிட்/ கிரெடிட் கார்டு/ நெட் பேங்கிங் / மூலம் கட்டணத்துடன் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி - 01/06/2022 இரவு 11.55 மணி வரை
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் திருத்தங்கள்/திருத்தங்களுக்கான திருத்தச் சாளரத்தைத் திறக்கும் தேதி - 05/06/2022 (காலை 10 மணி வரை)
NIRDPR 2022: பட்டதாரிகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு!
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் உள்ள திருத்தங்கள்/திருத்தங்களுக்கான திருத்தச் சாளரத்திற்கான இறுதித் தேதி - 07/06/2022 இரவு 11.55 மணி வரை
ஆன்-லைன் விண்ணப்பத்தை நிரப்புவது தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்கள்/ தெளிவுபடுத்தல்கள், விண்ணப்ப போர்ட்டலில் உள்ள குறைகளை தொடர்பாக விண்ணப்பதாரர்கள் தொடர்புக்கொள்ள வேண்டிய டோல் எண்: +91 9513632711 என்ற எண்ணில் அழைத்து தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க:
தமிழகம்: தக்காளி, பீன்ஸ் கிலோ ரூ. 100க்கு விற்பனை! காய்கறி விலை
Grafting Technique: ஒரே செடியில், உருளை கிழங்கு மற்றும் தக்காளி வளர்க்கலாம்!