நம்முடைய ஓய்வுகாலத்தில், நிம்மதியாகவும், மனநிறைவோடும் வாழ்வதைவிட, நம் பொருளாதாரத் தேவைகளை நாமே எதிர்கொள்ளும் நிலையில் இருக்கவேண்டும் என்பதுதான் பலருடைய ஆசை.
இத்தகைய வாழ்க்கை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு இயல்பாகவேக் கிடைத்துவிடும். குழந்தைகளும், பெற்றோருக்கு Pension என்னும் ஓய்வூதியம் கிடைக்கும், அதிலும் நமக்கு பங்கு இருக்கும் என நம்பிக்கையோடு காத்திருப்பர்.
அதே நேரத்தில் தனியார் நிறுவனப் பணியாளர்களைப் பொருத்த வரை, ஓய்வு காலம் என்பது பலத்த சவால் மிகுந்தது. கடும் நெருக்கடி மிகுந்ததாகவும் அமையலாம்.
ஆக உங்கள் ஓய்வு காலம் குறித்து கவலைப்படுவரா நீங்கள்? உங்களை கவலைக்கு மருந்தாக அமைகிறது LICயின் இந்த பாலிசி. இந்த பாலிசியின் பெயர் ஜீவன் ஆனந்த் (Jeevan Anand). இதில் நாள் தோறும் ரூ.80 செலுத்தினால் போதும். மாதத்திற்கு ஓய்வூதியமாக ரூ.28 ஆயிரம் கிடைக்கும்.
எப்படி முதலீடு (How to Invest)
இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வயது வரம்பு 28 ஆக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்படி குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் கழிந்தபிறகு ஓய்வூதியம் கிடைக்கும். LICயின் மிகச்சிறந்த பாலிசிகளில் இதுவும் ஒன்று. இதில் குறைந்தபட்ச உறுதித்தொகை ரூ.1 லட்சம். அதிகபட்சம் வரம்பு இல்லை.
என்டோமெண்ட் பாலிசி (An endowment policy)
இதில் முதலீடு செய்யும்போது, பணத்திற்கும் பாதுகாப்பு. உங்களுக்கு ஆயுள் காப்பீடும் கிடைக்கும். ஒரு நபர் தன்னுடைய 25வது வயதில் இருந்து முதலீடு செய்ய ஆரம்பித்தால், 35 வருடங்கள் கழித்து, ஓய்வூதியம் பெற முடியும்.
ப்ரீமியம்
இந்த திட்டத்திற்கு ப்ரீமியம் தொகையாக நாள் தோறும் ரூ.80 ரூபாய் செலுத்தப்படுகிறது. முதல் ஆண்டில் இதற்கு 4.5 சதவீத வரியும் சேர்ந்து வரும். 35 வருடங்கள் ப்ரீமியம் தொகையை செலுத்தினால் அதன் மதிப்பு 50 லட்சத்து 15ஆயிரமாக இருக்கும். இதற்கு வருடத்திற்கு 3 லட்சத்து 48 ஆயிரத்து 23 ரூபாய் பென்சனாக வழங்கப்படுகிறது. இதன்படி மாதாந்திர பென்சன் தொகை என்றால் அது 27 ஆயிரத்து 664 ரூபாயாக இருக்கும்.
மேலும் படிக்க...
மினிமம் பேலன்ஸ் லிமிட் குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு!
கேரட் உற்பத்தியை அதிகரிக்க புதிய முயற்சி-அரசு சார்பில் கேரட் கழுவும் இயந்திரம்!!