இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் மத்திய பகுதி, மரத்வாடா, ஆந்திர கடலோர பகுதி, கர்நாடகாவின் உட்பகுதி, சத்தீஸ்கர், விதர்பா, தெலங்கானா, அசாம், மேகலாயா, ஒடிசாவின் சில பகுதிகள், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டிய தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்றும், கொங்கன், கோவா பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மழை
பருவக்காற்று காரணமாக தமிழக்த்திலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அரசு மானியத்தில் சூரிய கூடார உலர்த்தி
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடற்கரை பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக,
-
ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
-
இதேபோல் இன்று முதல் 16ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா தெற்கு மகாராஷ்டிரா மற்றும் கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கீலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் உயரத்தில் எழும்பக்கூடும்.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
PM-Kisan; திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டீர்களா?
மழைப் பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் தேவலாவில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆம்பூர் மற்றும் கூடலூர் பஜாரில் தலா 4 செமீ, வால்பாறை, போளூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
Read more...
பருத்திச் செடிகளில் வெட்டுக்கிளி தாக்குதல்