Krishi Jagran Tamil
Menu Close Menu

விவசாயி ஆகிய நான்....! இந்த திட்டத்தில் இருக்கேனா இல்லையா?

Friday, 12 June 2020 03:32 PM , by: Daisy Rose Mary

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகளின் விவரங்களை மத்திய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது, இதன் மூலம் அரசு வெளியிட்டுள்ளது. இதில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை பின் வரும் விவரங்களின் அடிப்படையில் தெரிந்து கொள்லலாம். 


PM-Kisan திட்டம்

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-Kisan)அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு மூன்று தவணையாக இந்த பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 14 கோடி விவசாயிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி

நாடுமுழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முற்றிலும் முடங்கியுள்ள பொருளாதார மந்தநிலையைச் சீராக்க கொரோனா சிறப்பு நிதித் தொகுப்பாக 20 லட்சம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு அன்மையில் ஒதுக்கியது. இதில் வேளாண் துறைக்கு மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


கிசான் கிரெடிட் கார்டு (KCC)

இந்த வேளாண் நிதியை அதிக விவசாயிகள் பெற்றுப் பயனடையும் வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) எனப்படும் திட்டத்தீன் கீழ் 2.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு (KCC) வழங்கப்படவுள்ளது. இந்த அட்டையை பெற விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். இதனால் புதிதாக பலர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். 

நிலக்கடலையில் சாகுபடியில் லாபம் அள்ளிக் குவிக்கலாம்... உங்களுக்கான வழிமுறைகள்!

உங்கள் பெயர் உள்ளதா என்று தெரிந்துகொள்வது எப்படி?

இந்நிலையில், இந்த திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகளின் முழுமையான பட்டியலை மத்திய அரசு pmkisan.gov.in இல் பதிவேற்றியுள்ளது. இதன் மூலம் இந்த திட்டத்தின் பலன் உங்களுக்கு கிடைத்ததா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.

 • நீங்கள் சரிபார்க்க வேண்டுமெனில், pmkisan.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.

 • வலைத்தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள மெனுவில் Farmers Corner என்பதை கிளிக் செய்யுங்கள்

 • அங்கு கிடைக்கும் தொகுப்புகளில் Beneficiary List என்பதை தேர்வு செய்யுங்கள்.

 • பின் அதில் உங்கள் மாநிலம் , மாவட்டம், போன்ற விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்

 • அனைத்து பூர்த்தி செய்யப்பட்ட பிறகு Get Report என்பதை கிளிக் செய்யுங்கள்.

 • அதில் உங்கள் பகுதியில் PM-Kisanல் இணைந்திருப்பவர்களின் முழு பட்டியலையும் காண முடியும்

 • https://pmkisan.gov.in/Rpt_BeneficiaryStatus_pub.aspx - நேரடியாக பட்டியலை பார்க்க இதனை கிளிக் செய்யுங்கள்

விடுபட்டவர்களின் கவனத்திற்கு

முழுமையற்ற விண்ணப்பம் அல்லது தவறான ஆதார் விவரங்கள் காரணமாக சில விவசாயிகளின் பெயர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் Farmers Cornernல் புதுப்பிப்பு /மாற்றங்களை செய்து கொள்ளளாம்

மேலும் படிக்க... 

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!

PM Kisan Samman Nidhi Yojana PM - Kisan பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா அரசு திட்டங்கள் Kisan Credit Card KCC
English Summary: PM Kisan Samman Nidhi Yojana Here is the Detail Process on How to check Your Status

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

 1. 40% மானியத்தில் காய்கறி விதைகள் தொகுப்பு திட்டம்!- பயனடையுமாறு ஆட்சியர் அழைப்பு!
 2. விவசாயத்தில் இரட்டை லாபம் ஈட்ட வேண்டுமா? வேளாண்மை மீன் வளர்ப்பில் ஈடுபடுங்கள்!
 3. இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!
 4. நீலகிரிக்கு தொடரும் ரெட் ஆலர்ட்; அதி கன மழைக்கும் வாய்ப்பு!!
 5. வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!
 6. மானாவாரி துவரையில் அதிக மகசூல் பெற வேண்டுமா? வேளாண்துறை அளிக்கும் ஆலோசனைகள்!!
 7. சத்தான சமச்சீர் உணவிற்கு அவசியமான கீரைகளும் அதன் நன்மைகளும்!
 8. குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் காடை வளப்பு!
 9. பான் அட்டைத் தொலைந்துவிட்டதா? கவலைவேண்டாம்! ஆன்லைனில் மறுபிரதி எடுத்துக்கொள்ள வழிமுறைகள்!
 10. PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.