பீகார் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஆடைகள் அணிவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆடை கட்டுப்பாடு
இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசும் தங்களது மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் சட்ட திட்டங்களுக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களுக்கென பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிய கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அரசு அலுவலகங்களின் பணி கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கிலும் ஊழியர்களை எளிதாக அடையாளம் காணும் வகையிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை ஏற்று ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சாதாரண உடைகளில் வர வேண்டும்.
அத்துடன் பணி நேரத்தில் தங்களது அடையாள அட்டையை கட்டாயம் கழுத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தமிழ்நாட்டில் அகவிலைப்படி உயர்வு எப்போது? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்!
ஆதார் கார்டில் இந்த விவரங்களை அப்டேட் செய்ய புதிய கட்டுப்பாடு: UIDAI அதிரடி அறிவிப்பு!