மதுரையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆகியவை இணைந்து பெண்கள் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்வு ஒன்றை நடத்தியது. இந்நிகழ்வு தொழிலணங்கு என்ற தலைப்பில் நடைபெற்றது. மகளிர் சுய உதவிகள் குறித்துக் கூறப்பட்ட செய்திகளை விளக்குவதாக இப்பதிவு இருக்கிறது.
நிகழ்வில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படக் கூடிய பால் காளான், கடலை எண்ணெய், மஞ்சள் பை, மசாலா பொருட்கள், அப்பளம், புடவை முதலான பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான விருப்பப் கடிதங்களைத் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
மேலும் படிக்க: முதியோருக்குக் கட்டணமில்லா பஸ் பாஸ்-ஐ பெறத் தேதி அறிவிப்பு!
விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து பெண்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும், சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னதாகத் தொடங்கப்பட்ட சுய உதவி குழுக்கள் இயங்கக் கூடிய நிலை வைத்துப் பார்க்கும்போது, சில இடங்களில் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன; ஆனால்
சில இடங்களில் செயல்பாட்டில் இல்லை.
மேலும் படிக்க: DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!
தமிழகம் முழுவதும் சுய உதவிக் குழுக்களை முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வரத் தமிழகப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பல சலுகைகளும் குழுக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரையை முன் மாதிரியாகக் கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பல புதிய திட்டங்கள் கொண்டு வர உள்ளதாகக் கூறியுள்ளார். இதேபோல், மதுரையைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டிற்குக் கொண்டு வர உள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க