நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பல மாற்றங்கள் ஏற்பட போகிறது. இவை உங்களுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவைகளில் முதலாவதான LPG சிலிண்டர்கள் (LPG Gas cylinder) இருந்து ஆரம்பித்து SBI வரை கடைபிடிக்கப்படும் விதிகள் ஜூலை 1 முதல் மாறப்போகிறது.
1.எல்பிஜி சிலிண்டர் விலை
ஜூலை 1 முதல் எல்பிஜி சிலிண்டரின் விலையில் மற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கவில்லை. ஆனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் விதத்தில், எல்பிஜி சிலிண்டர்களின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது, டெல்லியில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.809 ஆகியுள்ளது.
2.எஸ்பிஐ ஏடிஎம் கட்டணங்கள்
எஸ்பிஐ (State Bank of India) இன் BSBD வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு தனது சேமிப்பு கணக்கில் இருந்து 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம், இன்று 4 முறைக்கு மேல் ATM அல்லது வங்கி கிளை மூலமாகவோ பண பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் உடன் ஜிஎஸ்டி கட்டணமும் பிடித்தம் செய்யப்படும்..
3. சிண்டிகேட் வங்கி IFSC
கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் சிண்டிகேட் வங்கியின் IFSC Code இயக்கப்படாது. அதனால் பழைய ஐஎஃப்எஸ்சி கோடுகளை பயன்படுத்தி, இன்று முதல் வங்கிகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. எஸ்பிஐ செக்புக் கட்டணம்
எஸ்பிஐ BSBD வாடிக்கையாளர், ஒரு ஆண்டிற்கு 10 காசோலை தாள்கள் மூலம் இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தப்படும் காசோலைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 10 காசோலைகள் புத்தகத்திற்கு 40 ரூபாய் கட்டணம் + GST. 25 காசோலைகள் புத்தகத்திற்கு 75 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
5. டிடிஎஸ் பிடித்தம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு, அரசு இன்று முதல் டிடிஎஸ் பிடித்தம் செய்யபோவதாகத் திட்டமிட்டிருக்கிறது. மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கும் மேல் டிடிஎஸ் செலுத்துவோரை கண்டறிந்து அவர்களை வரி வரம்புக்குள் கொண்டு வர உதவும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.
மேலும் படிக்க
விரைவில் ரீசார்ஜ் முறையில் மின் கட்டணம் - விவசாய மின்இணைப்புக்கு மட்டும் விலக்கு!
Paytm முலம் LPG சிலிண்டர் முன்பதிவு செய்தால் ரூ.900 வரை கேஷ்பேக் பெறலாம்.