1. விவசாய தகவல்கள்

விரைவில் ரீசார்ஜ் முறையில் மின் கட்டணம் - விவசாய மின்இணைப்புக்கு மட்டும் விலக்கு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

விவசாய மின்இணைப்பைத் தவிர்த்து, மற்ற மின் இணைப்புகளுக்கு மின்கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மின்மயமான வாழ்க்கை

அனைத்துமே ஏறத்தாழ மின்மயமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், மின்சாதனங்களின் பயன்பாடு நம்மை வெகுவாக ஆட்கொண்டு விட்டது என்றே சொல்லலாம். இருப்பினும், மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதற்கு ஏற்ப உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சீர்திருத்தங்கள் அடிப்படையில் பயன்சார்ந்த புதுப்பிக்கப்பட்ட மின் வினியோகத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மின் விநியோகக் கட்டமைப்பு (Power supply structure)

அரசாங்க மின்வினியோக நிறுவனங்களின் நிதிநிலையை மேம்படுத்தவும், அவற்றின் மின்வினியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அவற்றுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

மலிவான நிலையில் மின்சாரம் (Cheap electricity)

2025-2026 நிதியாண்டு வரை இத்திட்டம் அமலில் இருக்கும். ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 758 கோடி செலவில் நிறைவேற்றப்படும். மின்இழப்புகளைக் குறைப்பது, நுகர்வோருக்குத் தரமான, நம்பகமான, விலை மலிவான மின்சாரத்தை வழங்குவது உள்ளிட்டவை இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

ரீசார்ஜ் முறை (Recharge mode)

மத்திய அரசு திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், விவசாய மின்இணைப்பு தவிர்த்து, மற்ற அனைத்து நுகர்வோருக்கும் பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். முன்கூட்டியே ரீசார்ஜ் செய்து அதைப் பயன்படுத்தலாம்.

கட்டுப்பாட்டு (Control)

மேலும், அன்றாடம் தங்களது மின்சார பயன்பாட்டை மக்கள் தெரிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப மின்சார பயன்பாட்டை ஒழுங்குபடுத்திக்கொள்ளலாம்.

10 கோடி பேருக்கு (For 10 crore people)

மொத்தம் 25 கோடி பிரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். அவற்றில் முதல்கட்டமாக 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 10 கோடி நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்து இந்த மீட்டர்கள் பொருத்தப்படும்.

அதாவது, 15 சதவீதத்துக்கு மேல் மின்சார இழப்பு கொண்ட 500 அம்ருத் நகரங்கள், அனைத்து யூனியன் பிரதேசங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக மின்இணைப்பு வைத்திருப்பவர்கள், வட்டார அளவில் அனைத்து அரசு அலுவலகங்கள், அதிக மின்சார இழப்பு உள்ள பகுதிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து இந்த மீட்டர் பொருத்தப்படும்.மீட்டர் பொருத்தும் பணியின் முன்னேற்றம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும்.

காலக்கெடு நீட்டிப்பு (Deadline extension)

அத்துடன், ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின்கீழ், நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி பங்களிப்பை மத்திய அரசே செலுத்தி வருகிறது. இந்த சலுகையைப் பெற பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 31ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

71 லட்சம் வேலைவாய்ப்பு (71 lakh employment)

இந்தக் காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், அமைப்புசார்ந்த துறைகளில் புதிதாக 71 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசுக்கு ரூ.22 ஆயிரத்து 98 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் மண்புழு உரம்: அதிக செலவில்லாமல் தயாரிப்பது எப்படி?

மண் புழுக்களின் பங்களிப்பு: உள்ளீடுகள் மற்றும் நுட்பங்கள்

தர்பூசணி விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!

English Summary: Soon Recharge Money Charge - Relaxation for Agricultural Electricity only! Published on: 01 July 2021, 07:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.