போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவ்லகளை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!
கொரோனா காலத்தில் ஓய்வறியாது தொடர்ந்து பணிபுரிந்த போக்குவரத்துத் தொழிலாளர்களைச் சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அது குறித்த சிறப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: தீப்பிடிக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி! முதலிடத்தில் தமிழகம்!!
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த சிறப்பு ஊக்கத்தொகை குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் சிறப்பு ஊக்கத் தொகையானது, 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகையினை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. ஜனவரி 2022ம் ஆண்டு முதல் ஜூலை 2022 வரை உள்ள காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகையான ரூ.171.05 கோடி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
மேலும் படிக்க: ஆழ்குழாய் கிணறு அமைக்க 100% மானியம்|ஆட்சியர் அறிவிப்பு|விவசாயிகளுக்கு அழைப்பு!
கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களைச் சிறப்பிக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடியை வழங்கிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு, முதலமைச்சர் வெளியிட்டதன் அடிப்படியில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
நோய் எதிர்ப்பு சக்தி முதல் கல்லீரல் பிரச்சனை வரை! அற்புதமான பலன்களை அள்ளித் தரும் பழம்!
பாரம்பரிய விவசாயத்திற்கு மானியம்|மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்!