குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ள நிலையில் புதிய ரேஷன் கார்டு கோரி அதிகளவில் மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000க்கான இரு தவணைகளில், ரூபாய் 2000 வீதத்தில் மே 21 மற்றும் ஜூன் 21 தேதியில் வழங்க ஆணையிடப்பட்டது. மேலும் ஜூன் 21 மாதத்தில் நிவாரண தொகை ரூபாய் 2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கவும் உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டு நிவாரண தொகையுடன் 14 பொருட்களும் அளிக்கப்பட்டன. தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த அறிவிப்பின் பெயரில் விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய குடும்ப அட்டை கோரி பலர் விண்ணப்பித்து வருகின்றனர். புதிதாக திருமணம் செய்தவர்கள், இதுவரை குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தற்போது அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இணையதளம் மூலமும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் பலர் புதிய ரேஷன் கார்டகோரி விண்ணப்பித்து வரும் நிலையில், ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் மின்னனு அட்டை அளிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த வாக்குறுதி ஏன் இன்னமும் செயல்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வமுடன் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில், குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என்றும், அடுத்து குடும்பத்தலைவி என்று தான் வரிசைப்படி உறவுகள் எழுதப்பட்டிருக்கும். ஆனால், குடும்ப தலைவி என்று முதலில் பெயர் இடம்பெற்றிருந்தால்தான் ஆயிரம் ரூபாய் என்ற பேச்சு வெகு நாளாகவே சர்ச்சையில் உள்ளது. இதனால் பெரும்பாலோர் குடும்ப அட்டையில் குடும்ப தலைவி என்ற பெயரை முதல்வரிசையில் திருத்தி வருகிறார்கள்.
இது போன்ற நிலையில் ரேஷன் கடையில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் தருவோம் கூறியதையடுத்து கொண்டைகடலை கொடுத்த கார்டுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொண்டைகடலை போடாத கார்டுக்கு கொடுக்கப்படாது என்று கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நான்கு எழுத்துக்கள்(NPHH) கொண்ட நபர்களுக்கு 1000ரூபாய் இல்லை என்றும் மூன்று எழுத்துக்கள் (HHH) கொண்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள். வழங்கினால் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கு சமமாக கொடுங்கள் இல்லையெனில் கொடுக்காதீர்கள் என்று தமிழக பாஜக பிரமுகர் வலியுறுத்தி இருக்கிறார்.
மேலும் படிக்க:
விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!
ஜூலை 31க்குள் ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: அமல்படுத்த உத்தரவு..!