நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 December, 2022 5:35 PM IST
Incentives for Sugarcane Farmers: Tamil Nadu Govt issues Ordinance

கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் அவர்கள் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் இல்லம் தேடி பண்ணை காய்கறிகள், 15.40 கோடி மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள கட்டிடங்கள், 19.16 லட்சம் இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டம், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ஆகிய நலத்திட்ட பணிகளை துவங்கப்பட்டது. இதில், சிறப்பு ஊக்கத்தொகை குறித்து இந்த பதிவு விளக்குகிறது.

தமிழ்நாட்டில், கரும்பு சாகுபடிப் பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு, அதிக கரும்பு மகசூலுடன், அதிக சர்க்கரை கட்டுமானமும் தரக்கூடிய கரும்பு இரகங்களை பிரபலப்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, இணைமின் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2020-21 அரவைப்பருவத்திற்கு வழங்கப்பட்ட கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை

கடந்த 2015-16 முதல் 2019-20 அரவைப்பருவம் வரை கரும்பு விலை உயர்த்தப்படாமல், டன்னுக்கு ரூ.2750/- மட்டுமே வழங்கப்பட்டது. 2022-21 அரவைப்பருவத்திற்கு ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ.2707.50/- ஐ விட கூடுதலாக உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு ரூ.192.50 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டது. இதனால், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.2900/- கிடைத்தது.

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள், 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவித்தவாறு, ஒன்றிய அரசு 2021-22 ஆம் அரவைப்பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Renumerative Price) ரூ.2755ஐ/-யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கிடும் வகையில், மாநில அரசு ரூ.199 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வழங்கி வேளாண்மை- உழவர் நலத்துறை ஆணையிட்டது.

மேலும் படிக்க:

வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் Machine வாங்க 50% மானியம்| கரும்புக்கு விவசாயிக்கு Incentive ரூ.195

கோக்கோ முந்திரி சாகுபடிக்கு ரூ.12,000 மானியம்: Apply Today!

English Summary: Incentives for Sugarcane Farmers: Tamil Nadu Govt issues Ordinance
Published on: 12 December 2022, 05:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now