1. தோட்டக்கலை

100 % மானியத்தில் சொட்டு நீர் பாசனம்- விண்ணப்பிக்க அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Drip Irrigation at 100% Subsidy- Call to Apply!

சேலம் மாவட்ட விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்தில், சொட்டு நீர் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.

100% மானியம் (100% subsidy)

பிரதமரின் கிசான் சன்சாய் யோஜனா சொட்டு நீர் பாசனத் திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு அதாவது 5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.

75% மானியம் (75% subsidy)

அதேநேரத்தில் 5 ஏக்கருக்கு மேல் சொந்தமாக நிலம் வைத்துள்ள பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது.

களைக் கட்டுப்படும் (Will control weeds)

இதனால், நீர், உர பயன்பாட்டுத் திறன், 80 - 90 சதவீதம் அதிகரிக்கிறது. பயிர் சாகுபடிக்கு நீர் மற்றும் உரம் குறைந்த அளவேத் தேவைப்படுகிறது. இதன்மூலம் களை வளர்ச்சி குறைவதுடன், நோய், பூச்சி தாக்கமும் நிச்சயம் குறையும். கூடுதல் மகசூல் கிடைக்கும். கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, பயறு வகை பயிர்கள், தென்னை போன்ற பயிர்களுக்குச் சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.

துணை நீர் பாசனம் (Subsidiary irrigation)

  • சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பயனாளிகளுக்கு, துணை நீர் பாசனம் அமைப்புகள் அமைக்கவும் , மானியம் வழங்கப்படுகிறது.

  • அதன்படி, ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க, 25 ஆயிரம் ரூபாய், மின்மோட்டார் அமைக்க, 15 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

  • நீர் சேகரிப்பு தொட்டி கட்ட 40 ஆயிரம் ரூபாயும், குழாய் பதிக்க, 10 ஆயிரம் ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

விவசாயிகள், சிறு, குறு விவசாயி சான்று, ரேஷன் கார்டு, ஆதார், சிட்டா, அடங்கல், நில வரைபடம், புகைப்படம் ஆகியவற்றுடன், பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவேண்டும்.

தொடர்புக்கு (Contact)

கூடுதல் விபரங்களுக்கு, வேளாண் உதவி அலுவலர்களை, 8940254386, 9843503962, 9894767567 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதேபோல், வீரபாண்டி வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் கிரிஜா, சங்ககிரி வேளாண் உதவி இயக்குனர் சுதா வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

மேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்!

English Summary: Drip Irrigation at 100% Subsidy- Call to Apply! Published on: 15 June 2021, 09:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.