News

Friday, 06 November 2020 06:22 PM , by: Elavarse Sivakumar

திருவண்ணாமலையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ரெ.பா.வளர்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

  • குறைந்த நாள்களில் அதிக வருமானம் தரக்கூடிய பயிர்களாக காய்கறி பயிர்கள் உள்ளன.

  • விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்யத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தோட்டக்கலைத் துறை தயாராக உள்ளது.

  • இதற்காக, மிக குறைந்த நீர் ஆதாரம் கொண்ட இடங்களில் தேவையான நீர் ஆதாரத்தை ஏற்படுத்தவும், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கவும் தோட்டக்கலைத் துறை சார்பில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

  • மேலும் காய்கறிகள் பயிரிடுவதற்கான விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

  • கத்தரி, மிளகாய், தக்காளி, பீர்க்கை வெண்டை, பாகற்காய், புடலை, வெள்ளரி, பூசணி, தர்பூசணி பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது

  • இயற்கை முறையில் நஞ்சு இல்லாத காய்கறி உற்பத்தி செய்திடும் விவசாயிகளுக்கு ஏற்றுமதி அடையாள சான்றும், ஒரு ஹெக் டேருக்கு ரூ.3700 முதல் ரூ.5000 வரை ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

  • எனவே, வரும் தை மாத பருவத்தில் காய்கறி நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!

இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)