News

Friday, 24 February 2023 08:09 AM , by: R. Balakrishnan

Paddy moisture

காவிரி டெல்டா பகுதிகளில் பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால், சுமார் ஒரு இலட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

நெல் ஈரப்பதம் (Paddy Moisture)

நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை உயர்த்தி வழங்க கோரி கடந்த பிப்ரவரி 5-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும். சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய கூட்டுக் குழு ஆய்வு செய்து, சேகரிக்கப்பட்ட நெல் மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளை மத்திய அரசுக்கு சமர்பித்தது. அதனை அடிப்படையாக கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை தற்போதுள்ள 19% லிருந்து 20% மாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 - 5 சதவிகிதம் வரை தளர்த்த கோரிய நிலையில், 5% மாக நிர்ணயித்துள்ளது.

சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை தளர்த்த கோரிய நிலையில், 4% மாக நிர்ணயித்துள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பத அளவுகளில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான அடிப்படை விலையும் நிர்ணயித்துள்ளது.

மேலும் படிக்க

PM Kisan நிதி 6,000 ரூபாய் தேவையில்லையா? வரவிருக்கும் மத்திய அரசின் புதிய அம்சம்!

வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)