2019ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப்பணி தேர்வில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியக் குடிமைப்பணி 2019ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் 58-வது இடம் பிடித்துள்ள செல்வி.எஸ்.எஸ்.பரணி, கடந்த 2010-14ம் ஆண்டில் கோவையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை வேளாண்மை படிப்பில் பட்டம் பெற்றவர்.
499-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ள எஸ்.சங்கீதா, கடந்த 2014ல் மதுரையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை வேளாண்மைப் பட்டம் பயின்றவர்.
559-வது இடம் பிடித்த எஸ்.அபிநயா, கோவையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2010-2014ம் ஆண்டு இளங்கலை வேளாண்மைப் பட்டம் முடித்தவர்.
இதேபோல் கடந்த 2011-2015ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பயின்ற கோத்தகிரியைச் சேர்ந்த மல்லிகா, குடியுரிமை பணி தேர்வில், 621-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 2015ம் ஆண்டு இளங்கலை வேளாண்மை படிப்பை முடித்த, வெங்கடேச பிரபு 751-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர்கள் ஐந்து பேருக்கும், தமிழநாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் குமார் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
மலர் சாகுபடி செய்ய விருப்பமா? பயிற்சி அளிக்கிறது வனவியல் கல்லூரி!
தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை - இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!