மத்திய உணவு அமைச்சகத்தின் கீழ், தஞ்சாவூரில் தன்னாட்சி கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது இந்திய உணவுப் பதன தொழில்நுட்ப கழகம் (Indian Institute of Food Technology) இங்கு, உணவு தானியங்களை பதப்படுத்துவது, மீன், இறைச்சி, கோழி மற்றும் பால் உற்பத்திகளை மேம்படுத்துவது, உணவு பொருட்கள் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வது, அறுவடைக்கு பிந்தைய செயலாக்கம், ஈர நிலப்பரப்பில் விளையும் பயிர்கள், புயல் பாதிப்புள்ள விலை நிலப் பகுதிகளில் எவ்வகை தானியங்களை பயிரிடுவது போன்றவற்றை, தொழில்நுட்ப கள ஆராய்ச்சி கல்வி (Technical field research education) மூலம் கற்றுத்தரப்படுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தாய்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களான, நெப்ராஸ்கா பல்கலைக்கழகம் (University of Nebraska), கொலராடோ மாநில பல்கலைக்கழகம், இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகம், கன்சாஸ் மாநில பல்கலைக்கழகம், ஆசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் கிரீன்விச் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு உணவு தொழில்நுட்ப பிரிவில் தரமான கல்வி வழங்கப்படுகிறது.
துறைகள்
கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு, உணவு பொறியியல், பேக்கேஜிங் சாதனங்கள் மற்றும் கணினி மேம்பாடு, உணவு தயாரிப்பு மேம்பாடு, உணவு பாதுகாப்பு (Food security) மற்றும் தர சோதனை, உணவு உயிர்தொழில்நுட்பம், முதன்மை செயலாக்கம், சேமிப்பு மற்றும் கையாளுதல், கணக்கீட்டு மற்றும் நானோஸ்கேல் புராசசிங் யூனிட், திட்டமிடல் (Planning) மற்றும் கண்காணிப்பு மற்றும் உணவு வர்த்தக மையம் போன்ற துறை பிரிவுகள் உள்ளன.
ஆய்வுக்கூட வசதிகள்
அதிநவீன தொழில்நுட்பத்திற்கு இணையான, யூனிட் ஆப்ரேஷன், வெப்ப பரிமாற்றம் , குளிர் பதன மற்றும் காற்று சீரமைத்தல் ஆய்வகம் (Air conditioning laboratory), திரவ இயக்கவியல் மற்றும் ஹைட்ராலிக்ஸ் ஆய்வகம், பயிர் செயல்முறை பொறியியல் ஆய்வகம், மசாலா செயல்முறை பொறியியல் ஆய்வகம், உணவு பொறியியல் ஆய்வகம் (Food Engineering Laboratory), உற்பத்தி நடைமுறை ஆய்வகம், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் லேப், உணவு பேக்கேஜிங் ஆய்வகம், உணவு வேதியியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வகம், பால் மற்றும் இறைச்சி அறிவியல் ஆய்வகம், அடிப்படை அறிவியல், கணினி மற்றும் தொடர்பியல் உள்ளிட்ட ஆய்வகங்களை பயன்படுத்தி, உணவு தொழில்நுட்பத்தில் தங்களின் நுண்ணறிவு திறன்களை மாணவர்கள் வளர்த்து கொள்ளலாம்.
படிப்புகள்
ஃபுட் புராசசிங் இன்ஜினியரிங் பிரிவில், பி.டெக்., எம்.டெக்.,மற்றும் பிஎச்.டி., பட்டப்படிப்புகள், மற்றும் ஃபுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பிரிவில், எம்.டெக்., படிப்பு வழங்கப்படுகின்றன. இளநிலை படிப்புக்கு, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வில் (Entrance Exam) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கு, பி.டெக்., ஃபுட் புராசசிங் இன்ஜினியரிங், ஹொம் சயின்ஸ், ஃபுட் டெக்னாலஜி, அக்ரிகல்சர் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
உதவித்தொகை
இன்ஸ்டிடியூட் மெரிட் கம் ஸ்காலர்ஷிப், இன்ஸ்டிடியூட் பிரி ஸ்டூடண்ட்ஷிப், இன்ஸ்டிடியூட் நேஷனல் பிரைஸ், மற்றும் அனில் அதலகா ஸ்காலர்ஷிப் போன்ற உதவித்தொகைகள் (Scholarships) வழங்கப்படும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நாட்டுக்கோழி வளர்க்க ஆசையா? வந்துவிட்டது 50% மானியத்துடன் அருமையான திட்டம்!
விவசாயதுறைக்கு பல கோடி நிதி உதவி! பயன்பெற்ற 2.5 கோடி விவசாயிகள்! பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்!