Krishi Jagran Tamil
Menu Close Menu

நாட்டுக்கோழி வளர்க்க ஆசையா? வந்துவிட்டது 50% மானியத்துடன் அருமையான திட்டம்!

Saturday, 14 November 2020 05:57 PM , by: KJ Staff

Credit : LLB

தொழில் முனைவோராக முயற்சிக்கும், இளைஞர்களுக்கு வந்துவிட்டது அற்புதத் திட்டம். தற்போதைய காலகட்டத்தில், எல்லாமே டெக்னாலஜி என்ற நிலையில் தான் உள்ளது. கோழியிலும் பிராய்லர் கோழி வந்த பின்பு, நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் எண்ணத்திலும், நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும் (Encourage) திருவள்ளூர் மாவட்டத்தில் 50% மானியத்தில் வந்துவிட்டது அருமையான திட்டம். திருவள்ளூர் மாவட்டத்தில், நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் இணைந்து மானியம் (Subsidy) பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

50% மானியத்துடன் நாட்டுக்கோழி:

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் (National Agricultural Development Program) கீழ் 2020 - 21ம் ஆண்டில் தொழில் முனைவோர் (entrepreneurs) வளர்ச்சிக்கு, நாட்டு கோழிகள் ஒன்றியத்தில் தலா 3 பேருக்கு மிகாமல், 50 சதவீதம் மானியத்துடன் (50% Subsidy) கிராம ஊராட்சியில் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 2500 சதுர அடி நிலப்பரப்புடைய கொட்டகையில், 1000 கோழிகள் (Chickens) பராமரிக்கும் திறனுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி (ம) விண்ணப்பிக்கும் முறை:

கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராகவும், முந்தைய ஆண்டுகளில் (2012 - 2017) கோழி வழங்கும் திட்டத்தில் மற்றும் தேசிய கால்நடை முகமை திட்டத்தில் (National Livestock Agency program) பயன் பெற்றவராக இருக்ககூடாது. விதவைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமையும் (priority), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு 30 சதவீதம் முன்னுரிமையும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவோர், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில், கால்நடை உதவி மருத்துவர்களை (Veterinary assistant physicians) அணுகி, ஒரு வாரத்துக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள், அரசின் இத்திட்டத்தைப் பயன்படுத்தி, வாழ்வில் தொழில் முனைவோராக கால்தடம் பதியுங்கள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாய நிலங்களில் மலட்டுத்தன்மையைத் தடுப்பதற்கான தமிழரின் ஆராய்ச்சி! சீனா நிதியுதவி!

விவசாயதுறைக்கு பல கோடி நிதி உதவி! பயன்பெற்ற 2.5 கோடி விவசாயிகள்! பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்!

நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் மானியம் Subsidy திருவள்ளூர் மாவட்டம் 50% மானியம்! Chicken
English Summary: Desire to raise Chickens? Fantastic project with 50% subsidy has arrived!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. இயற்கை வழி விவசாயம் செய்தால், தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம்!
  2. பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
  3. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய விவசாயம்!
  4. வங்கக் கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.... புயலாக மாற வாய்ப்பு!!
  5. பெண்களே வாங்க..! உங்களுக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டம்! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
  6. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள்! - போலீசார் விரட்டியடிப்பால் பரபரப்பு!
  7. நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!
  8. 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கும் முயற்சி : தேன் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு துவக்கம்!!
  9. ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
  10. மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் அரசு பரிசீலிப்பதாக வேளாண்துறை தகவல்!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.