2022-23 ஆங்கில எண்ணெய் ஆண்டின் முதல் பாதியில் சோயாமீல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சோயா பொருட்களின் இந்தியாவின் ஏற்றுமதி 110% அதிகரித்துள்ளது. அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகியவற்றின் பெரிய கொள்முதல் காரணமாக இந்த ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோயாபீன் சந்தை வரத்து மார்ச் மாதத்தில் குறைந்தாலும், சோயாபீன் உணவுக்கான ஏற்றுமதி இலக்கான 14 லட்சம் டன்களை எட்ட இயலும் அல்லது அதனையும் தாண்டி ஏற்றுமதி செய்ய இயலும் என சோயாபீன் செயலிகள் சங்கம் (SOPA- Soybean Processors Association of India) தெரிவித்துள்ளது.
இந்திய சோயாபீன் செயலிகள் சங்கத்தின் (SOPA) கூற்றுப்படி, 2022-23 எண்ணெய் ஆண்டின் அக்டோபர் மற்றும் மார்ச் இடையே உணவு ஏற்றுமதி 4.74 லட்சம் டன்களில் இருந்து 9.99 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது. இருப்பினும், சோயாபீன் வரத்து சந்தையில் மார்ச் மாதத்தில் குறைந்துள்ளது. சோயாபீன் விலை சந்தையில் குறைவதால் விவசாயிகள் கையிருப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர், அதனால்தான் பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதத்தில் வரத்து கணிசமாகக் குறைவாக இருந்தது என தெரிவித்துள்ளனர்.
சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளுக்கும் குறைவான தேவை இருந்தது. SOPA செயல் இயக்குநர் டிஎன் பதக் கருத்துப்படி, சோயாபீன் உணவுக்கான 14 லட்சம் டன் ஏற்றுமதி இலக்கை நாங்கள் அடைவோம் அல்லது அதைவிட சற்று அதிகமாகவே நடப்பாண்டு ஏற்றுமதி இருக்கும் என்றார்.
சுமார் 4.34 லட்சம் டன்கள் சோயாமீல் வியட்நாம் கொள்முதல் செய்துள்ளது. இது இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் மொத்த ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 43 சதவீதம் ஆகும். பங்களாதேஷைத் தொடர்ந்து இரண்டாவது பெரியளவில் கொள்முதல் செய்யும் நாடாக நேபாளம் உள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை கணிசமான அளவு இந்திய சோயாமீலை வாங்கும் சில நாடுகளாகும். கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட 6.44 லட்சம் டன் உடன் ஒப்பிடும்போது இந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய இயலும் என தெரிவித்துள்ளார்கள்.
Soybean Processors Association of India- வின் கூற்றுப்படி, 2022 காரிஃப் பருவத்தில் 120.4 லட்சம் டன் சோயாபீன் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் பீன்களின் சந்தை வருகை 26% வரை அதிகரித்து 77 லட்சம் டன்னாக இருந்தது.
கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 61 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 2.48 டன்னாக இருந்த சோயாபீன் இறக்குமதி, இந்த ஆண்டு 1.57 டன்னாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
நிலக்கரி விவகாரம்- முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்!