மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 January, 2021 7:57 AM IST
Credit : Deccan Chronicle

புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என உயர்த்தப்படுவதாக தமிழக அரசு  (TamilNadu Government)  அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Chief Minister Edappadi Palanisamy) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

  • அடுத்தடுத்து தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்களினால் (Niver and Burevi Cyclone), தமிழகத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன், வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

  • இதையடுத்து, மத்தியக் குழு (Central Team) புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

  • இதன் அடிப்படையில், நிவர் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க மொத்தம் 3,750.38 கோடி ரூபாயும், புரெவி புயலின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க மொத்தம் 1,514 கோடி ரூபாய் ய் தேவைப்படும் என மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசின் நிதி உதவி கோரப்பட்டுள்ளது.

  • இந்நிலையில் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மானாவரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகைரூ.13 ஆயிரத்து 500 லிருந்து, 20 ஆயிரம்- ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

  • இதேபோல், மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையான ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 7410 ரூபாய் என்பதை, 10 ஆயிரம்- ரூபாயாக உயர்த்தியும்,

  • பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத்தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் 18 ஆயிரம்- ரூபாய் என்பதை, 25 ஆயிரம்- ரூபாயாக உயர்த்தியும் வழங்க ஆணையிட்டுள்ளேன்.

  • உயர்த்தப்பட்ட இந்த இடுபொருள் நிவாரணத்திற்கான தொகையை, தமிழ்நாடு அரசு வழங்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!

ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

English Summary: Input relief amount will be increased to Rs. 20,000 - Chief Minister Edappadi Palanisamy's announcement!
Published on: 04 January 2021, 07:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now