News

Saturday, 01 April 2023 09:17 AM , by: R. Balakrishnan

Small savings schemes

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு திருத்தி வருகிறது. நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஏப்ரல் - ஜூன் காலாண்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஜூன் காலாண்டுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதம் குறித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

சிறுசேமிப்பு திட்டங்கள்(Small Savings Schemes)

ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கு சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய வட்டி விகிதங்கள்:

  • சேமிப்பு டெபாசிட் (Savings deposit) : 4%
  • 1 ஆண்டு டைம் டெபாசிட் (1 Year Time deposit) : 6.8%
  • 2 ஆண்டு டைம் டெபாசிட் (2 Year Time deposit) : 6.9%
  • 3 ஆண்டு டைம் டெபாசிட் (3 Year Time deposit) : 7%
  • 5 ஆண்டு டைம் டெபாசிட் (5 Year Time deposit) : 7.5%
  • 5 ஆண்டு தொடர் வைப்பு நிதி (RD) : 6.2%
  • சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Senior citizen savings scheme) : 8.2%
  • மாத வருமான திட்டம் (Monthly Income Account Scheme) : 7.4%
  • தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings certificate) : 7.7%
  • பொது வருங்கால வைப்பு நிதி (PPF) : 7.1%
  • கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra) : 7.5% (115 மாத முதிர்வு)
  • செலவமகள் சேமிப்பு திட்டம் (Sukanya Samriddhi Account Scheme) : 8%

கவனிக்க வேண்டியவை

சேமிப்பு டெபாசிட், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. மற்ற அனைத்து திட்டங்களுக்கும் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தில் இதற்கு முன் 7.2% வட்டி வழங்கப்பட்டது. ஆனால் அப்போது முதிர்வு காலம் 120 மாதங்களாக இருந்தது. தற்போது வட்டி விகிதம் 7.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், முதிர்வு காலம் 115 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தங்க நகை வாங்கும் போது இதைப் பார்த்து வாங்குங்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

புதிய சிம் கார்டு வாங்கும் போது கவனமாக இருங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)