1. செய்திகள்

தங்க நகை வாங்கும் போது இதைப் பார்த்து வாங்குங்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Gold Jewellery

ஹால்மார்க் இல்லாமல் விற்பனை செய்யும் தங்க நகை விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

புதிய விதிகள்

இந்தியாவில் போலி தங்க நகைகளை விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கத்தில் இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) சில விதிகளை அறிவித்துள்ளது. அதில் BIS ஹால்மார்க் முத்திரை, காரட்டில் தங்கத்தின் தூய்மை மற்றும் 6 இலக்க எண், எழுத்து கொண்ட HUID குறியீடு ஆகிய 3 அடையாளங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த விதிகள் நாளை (ஏப்ரல் 1) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், நகை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

ஹால்மார்க் 

இதில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் ஆராய்ச்சியாளர் கவின் பேசும்போது, “ஹால்மார்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இனிமேல் எந்த நகை விற்பனையாளரும் HUID மார்க் இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. வாங்குபவர்களின் தரத்திற்காக இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நுகர்வோர் Huid இல்லாத நகைகளை வாங்காதீர்கள். மேலும் நகைகளின் நம்பகத்தன்மை குறித்து Bis care ஆப்பில் huid number பதிவு செய்தால் ஆய்வகத் தகவல் உட்பட அனைத்தும் வந்துவிடும்.

விதிகளுக்கு உட்படாத நகைகள் குறித்து Bis மொபைல் ஆப்பில் புகார் கொடுக்கலாம். அதே போல் இனிமேல் ஹால்மார்க் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

நகைகளுக்கான இந்த ஹால்மார்க் விதிமுறை சரியான தங்கத்தை மக்கள் வாங்குகிறார்கள் என்ற மூன்றாம் தரப்பு உத்தரவாதத்தை வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. அதோடு நகைக் கடைக்காரரின் திறன், தரத்திற்கான உறுதிப்பாடு மற்றும் தூய்மையில் நிலைத்தன்மையின் உறுதிப்பாட்டிற்கான வலுவான ஆதாரம் ஆகியவற்றை இது வழங்குகிறது. நாளை (ஏப்ரல் 1ஆம் தேதி) முதல் பிஐஎஸ் பதிவு செய்யப்பட்ட நகைக் கடைகள் HUID ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என நுகர்வோர் விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

புதிய சிம் கார்டு வாங்கும் போது கவனமாக இருங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை!

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500: மாநில அரசின் அருமையான திட்டம்!

English Summary: Look for this when buying gold jewellery: Public warning! Published on: 31 March 2023, 04:30 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.