News

Friday, 17 July 2020 04:10 PM , by: Daisy Rose Mary

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 20.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் இடைத் தரகர்கள் இன்றி நல்ல லாபம் பெற முடியும் என்று மலர் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ரூ.20கோடியில் பன்னாட்டு ஏல மையம் International auction center at Rs 20 crore

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் சுமார் 3,702 ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் முறையான ஏற்றுமதி வசதிகள் இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலமே மலர் விற்பனையைச் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை.

ஓசூரில் பன்னாட்டு ஏல விற்பனை மையம் அமைக்கவேண்டும் என்று மலர் விவசாயிகள் தரப்பில் முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டது. இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையின் மோரனப்பள்ளியில் 7.68 ஏக்கர் பரப்பளவில் ரூ.20.20 கோடி திட்ட மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல விற்பனை மையம் அமைக்கும் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

39,383 டன் மலர் உற்பத்திக்கு இலக்கு -Target for flower production of 39,383 tonnes

இந்த மையத்தின் மூலம் கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ஜெர்பரா, கார்னேசன், ரோஜா, மேரிகோல்டு உள்ளிட்ட மலர் வகைகள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையில் அந்நியச் செலாவணி கிடைக்கும் என்று திட்டமிட்டப்பட்டுள்ளது. சுமார் 39 ஆயிரத்து 383 டன் மலர் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி (Farmers Happy)

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓசூர் மலர் விவசாய கூட்டமைப்பின் தலைவரும், தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குநர்களில் ஒருவருமான பாலசிவபிரசாத், பெரும்பாலும் இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து விற்பனை செய்யப்படும் பூக்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பது இல்லை என்று குறிப்பிட்டார்.

தற்போது அமைய உள்ள இந்த பன்னாட்டு ஏல விற்பனை மையத்தின் மூலம் விவசாயிகள் நேரடியாக மற்ற நாடுகளுக்கு தங்களின் மலர்களை விற்பனை செய்ய முடியும் என்பதால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் இதனால் சிறு விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் முதல் முறையாக நேரடியாகவும், இணையதள மூலமாகவும் மலர் விவசாயத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் மலர் விவசாயிகளுக்கு நிரந்தர வாழ்வாதாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் பாலசிவபிரசாத் கூறியுள்ளார்.

மேலும் படிக்க... 

கயிறு மற்றும் கயிறு பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

மூலிகைகளின் அரசி துளசியின் மருத்துவ குணங்கள் தெரியுமா உங்களுக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)