திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே பஸ் போக்குவரத்து (Bus Transportation) தொடங்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தளர்வுகள்
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் (Relaxations) ஜூலை 5 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்களை வகை 1, வகை 2 மற்றும் வகை 3 எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வகை 3க்கு ஏற்கனவே பஸ் சேவைகள் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து
இந்த 27 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையே குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் பஸ் சேவையானது, ஜூன் 28ஆம் தேதி காலை 6 மணி முதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!
மாவட்டங்களில் ரூ.100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை! பொதுமக்கள் கவலை!