News

Wednesday, 03 May 2023 07:54 AM , by: R. Balakrishnan

Verify Mobile number in Aadhar

நாடு முழுவதும் மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்நிலையில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை சரிபார்க்க UIDAI அனுமதி வழங்கி இருக்கிறது.

ஆதார் அட்டை (Aadhar card)

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சார்பில் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. நாட்டின் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கும் நிலையில் அதில் சில திருத்தங்களை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அந்த வகையில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை சரிபார்க்க UIDAI அனுமதி வழங்கி இருக்கிறது. சில நேரங்களில் பயனர்கள் மொபைல் எண் எது என தெரியாமல் இருக்கின்றனர். அதனால் இந்த புதிய வசதி மூலம் பயனர்கள் இதை எளிமையாக சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் அதிகாரபூர்வ இணையத்தளமான https://myaadhaar.uidai.gov.in/ அல்லது mAadhaar ஆப் மூலம் ‘மின்னஞ்சல்/மொபைல் எண்ணைச் சரிபார்க்க முடியும். மேலும் அவர்கள் விரும்பினால் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் எண் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு இருந்தால் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண் ஏற்கனவே எங்கள் பதிவுகளுடன் சரிபார்க்கப்பட்டது என்ற செய்தி திரையில் வரும், மேலும் ஒரு குடியிருப்பாளர் மொபைல் எண் நினைவில் இல்லை என்றால், அவர் பதிவு செய்யும் போது அவர் கொடுத்த மொபைலின் கடைசி மூன்று இலக்கங்களை மியாதார் போர்ட்டல் அல்லது mAadhaar செயலியில் பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

இந்தியர்களின் சராசரி சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அருமையான அறிவிப்பு: 4% அகவிலைப்படி உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)