நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 February, 2023 12:47 PM IST
Introduction of 23 new crops on behalf of Tamil Nadu Agricultural University

கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சாா்பில் 4 புதிய நெல் ரகங்கள் உள்பட வேளாண்மை, தோட்டக்கலை, மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 வேளாண் பயிா்கள், 3 தோட்டக்கலை பயிா்கள், 4 மரப்பயிா்கள் என 23 புதிய பயிா் ரகங்களை பல்கலைக்கழக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி அறிமுகப்படுத்தினாா். மேலும்,விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 10 புதிய தொழில்நுட்பங்களும், 6 புதிய பண்ணை இயந்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பயிர் ரகங்களின் அறிமுகம் நிகழ்விற்கு பின் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி குறிப்பிட்டவை:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள்,வேளாண் அறிவியல் நிலையங்களும் இயங்கி வருகிறது. இந்த நிலையங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப புதிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து ஆண்டுதோறும் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வனப்பயிர்கள் என 23 புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் புதிய ரகங்கள் வெளியிட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும்,விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 10 புதிய தொழில்நுட்பங்களும், 6 புதிய பண்ணை இயந்திரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

4 புதிய நெல் ரகங்கள் உட்பட தோட்டக்கலை பயிர்களில் காய்கறி, பயிர்கள் சாகுபடி செய்யும் வகையில் பீர்க்கங்காய் மற்றும் குத்து அவரையில் தலா ஒரு ரகமும், மலர் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் மார்கழி மல்லி என்ற மலர் ரகமும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மானாவரி மற்றும் தரிசு நிலங்களில் சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் சுமார் 4 புதிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அறிமுகம் செய்யப்பட்ட 23 வகையான புதிய பயிா் ரகங்களின் விவரம் –

  • கோ.56
  • கோ.57
  • ஏடிடி.58
  • ஏஎஸ்டி.21
  • மக்காச்சோளம்-கோ.ஹெச்.11
  • கம்பு-கோ.ஹெச்.10
  • சோளம்-கே.13
  • குதிரைவாலி-அத்தியந்தல்.1
  • பனிவரகு-அத்தியந்தல்.2
  • பாசிப்பயறு-கோ.9
  • பாசிப்பயறு-வம்பன்.6
  • தட்டைப்பயறு-வம்பன்.4
  • சூரியகாந்தி-கோ.ஹெச்.4
  • எள்-வி.ஆா்.ஐ.5
  • கரும்பு-கோ.18009
  • பீா்க்கங்காய்-மதுரை.1
  • குத்துஅவரை-கோ.16
  • மாா்கழி மல்லிகை-கோ.1
  • சணப்பை-ஏடிடி.1
  • இலவம்பஞ்சு-மேட்டுப்பாளையம்.1
  • செம்மரம்-மேட்டுப்பாளையம்.1
  • சவுக்கு-மேட்டுப்பாளையம்.13
  • ஆப்பிரிக்கன் மகோகனி(காயா)-மேட்டுப்பாளையம்.1

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பயிர் ரகங்களையும் மற்றும் தொழில் நுட்பங்களையும் விவசாயிகள் பயன்படுத்தி வேளாண் சாகுபடியினை அதிகரிக்க வேண்டும்  என தனது பேட்டியில் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : 

ஜி20 மாநாடு நிறைவு - முக்கிய நிகழ்வுகள்

இனி இவர்கள் ரேஷன் கார்ட் பெற முடியாது!

 

English Summary: Introduction of 23 new crops on behalf of Tamil Nadu Agricultural University
Published on: 16 February 2023, 12:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now