சென்னை புறநகர் மின்சார ரயில்கள் அனைத்திலும் விரைவில் 12 பெட்டிகளை கொண்டு இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இதனால் பீக் ஹவர்ஸ் நேரங்களில் ரயில்களில் நிரம்பி வழியும் பயணிகள் கூட்டம் குறையும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் அலுவல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை மாநகருக்கு வந்து செவது வழக்கமாக இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் தலைநகருக்கு வந்து வீடு திரும்புவதற்குப் பயன்படும் போக்குவரத்தில் சென்னை புறநகர் ரயில்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்தினை ஒப்பிடும்பொழுது பயணக் கட்டணம் குறைவு. டிராஃபிக் ஜாம் பிரச்னை இல்லாதது போன்ற காரணங்களால் பொது போக்குவரத்தில் ஏழை, நடுத்தர மக்களின் புறநகர் மின்சார ரயில்கள் திகழ்கின்றன. குறிப்பாகப் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும், மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எனப் பல்லாயிரகணக்கானோர் நாள்தோறும் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, திருமால்பூருக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களிலும் அன்றாடம் 500 முறை (Trips) புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதனை கருத்தில் கொண்டு, சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் விரைவில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை கடற்கரையில் தொடங்கித் தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில்களில் பெரும்பாலானவை 12 பெட்டிகளுடனே இயக்கப்படுகின்றன. இருப்பினும், அதேசமயம் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், கும்மிடிபூண்டி வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் 60 சதவீதம் வரையிலான ரயில்கள் 12 பெட்டிகளுடனும், 40 சதவீத ரயில்கள் 9 பெட்டிகளுடனுமே இயக்கப்படுகின்றன.
40 சதவீத ரயில்களையும் 12 பெட்டிகளுடன் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தகவல் வெளியாகின்றது. இதன் முதல்கட்டமாக, இந்த வழித்தடங்களில் இருக்கின்ற நடைமேடைகளை (பிளாட்ஃபார்ம்) விரிவாக்கம் செய்யும் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. அடுத்தடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் இவ்வழித்தடங்களில் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் படிக்க
1000 ரூபாய் முதலீடு செய்தால் போதும்! 1 கோடி சேமிப்பு பெறலாம்!!