
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
2023-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டுச் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாக உள்ளது. பேருந்துகளில் பயணக் கட்டணம் அதிகம் என்பதாலும், பேருந்தை விட ரயில் பயணங்கள் வசதி அதிகம், கட்டணம் குறைவு என்பதால் பலரின் விருப்ப தேர்வாக ரயில் பயணம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
இந்த நிலையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு ரயில் பதிவு குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. ஜனவரி 10ஆம் தொடங்கி பொங்கல் விடுமுறை நாட்களுக்கான முன்பதிவை செப்டம்பர் 12ஆம் தேதி முதல் IRCTC இணையதளத்தில் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பண்டிகை நாட்களின் போது முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலை உள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
எனவே, காத்திருப்புப் பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குப்படும் என்றும் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
மேலும் படிக்க